Monday, 22 March 2010

கடம்பூர் தலவரலாறு

இந்திய திருநாட்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலங்கள் 274. அவற்றில் சோழர்கள் ஆட்சி செய்த சோழவளநாட்டில் விளங்கும் தளங்கள் 190. அவற்றுள் காவிரியின் வடகரையில் அமைந்தவை 63 அவற்றுள் 34 வது தலமாக விளங்குவது திருக்கடம்பூர் என்ற தலமாகும்.

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர்,வள்ளலார் , பாம்பன் சுவாமிகள் ,வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் வழிபாடியற்றி மகிழ்ந்த தலம் திருக்கடம்பூர் ஆகும்.

கயிலை மலையில் இருந்து சிவபெருமான் அருள் செய்கிறான் அங்கு சென்று அஷ்டகுல பர்வதங்கள் ,அதன் தலைவன் பர்வதராஜன், சந்திரன், சூரியன் தேவேந்திரன் முதலானோர் கடம்பூர் கோயிலையும் கயிலையை ஒத்ததென்று இங்கு வந்து வழிபடியற்றினார்கள் என்று அறியும்போது இக்கோயிலின் சிறப்பு மேலும் விளங்குகிறது

ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபடியற்றினர்கள் என்ற செய்திகள் அங்குள்ள சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டு உள்ளது
திரேதாயுகத்தில் சூரியனும் சந்திரனும் தேவேந்திரனும் உரோமரிஷியும் வந்து வழிபாடியற்றினர் . துவாபரயுகத்தில் அஷ்ட பர்வதங்களும் பர்வத ராஜனும் கலியுகத்தில் பதஞ்சலி முனிவர் வந்து வழிபாடியற்றினர் என்ற செய்திகளால் கோயிலின் தோற்றத்துக்கு முன்பே சிவபரம்பொருள் இங்கு எழுந்தருளி அருள் செய்த பெருமையுடைது. இத்திருக்கடம்பூர் ஆகும் என்பது தெளிவு.

இப்படி பண்டு முதல் இன்றளவும் பலராலும் வணங்கி வழிபடபெரும் திருக்கடம்பூர் காட்டுமன்னார்குடிக்கு தெற்க்கே மேலக்கடம்பூர் என்னும் வளர்பெயருடன் வழங்கி வருகிறது
காட்டுமன்னார்குடி-எய்யலூர் ,ஆயங்குடி, முட்டம் சாலையில் உள்ளது.

சிற்பகலை
கோயில்

தமிழக கோயில்கள் ஒன்பது வகைப்படும் இதில் கடம்பூர் கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது. நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டப்பெற்ற நிலையில் அழகிய தேர் வடிவில் சிறந்து விளங்கும் அற்புதமான கோயில்.
சூரியன் மூலட்டனத்தில் விளங்கும் அமிர்தகடேஸ்வரர் மீது பங்குனி 3,4,5 தேதிகளில் காலை சூரிய உதய கதிர்கள் விழும், அற்புதம் காண்பவர் பேருவுவகை கொள்வர் .அந்நாட்களில் சிறப்பு வழிபடு நடைபெறும்.

ராஜேந்திர சோழன் வாதாபி வரை படையெடுத்து சென்று அந்த நாட்டின் கோட்டை வாயிலில் இருந்த கணபதி சிலைகளை யும் துவாரபாலகர் சிலைகளையும் எடுத்துவந்தான் என்பது வரலாறு. கொண்டு வந்த கணபதி சிலைகளில் ஒன்றை திருகடம்பூரிலும் மற்றொன்றை திருசெங்காட்டன்குடி கோயிலிலும் பிரதிஷ்டை செய்ததாக அறிகிறோம். அதன் பின்னர் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் விளக்கம் பெற்றதாக கூறுகின்றனர்.
கழுகு வாகனத்தில் சனிஸ்வரன்
இத்தளத்தில் சனீஸ்வரன் கழுகு வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார், ராமாவதார காலத்திற்கு பின்னரே காக்கை சனி பகவானுக்கு வாகனமாயிற்று எதனால் இக்கோயிலின் பழமை அறியப்படுகிறது.
பதஞ்சலி
பதஞ்சலியின் தவத்தின் காரணமாக அவரது வேண்டுகோளை ஏற்று தில்லையில் ஆனந்த கூத்தாடினார். இத்தளத்தில் பதஞ்சலி தன தலை மெது நடராஜரை சுமந்து லிங்க வழிபாடு செய்யும் காட்சியினை காணலாம்.
தசபுஜரிஷபதாண்டவமூர்த்தி
சிவன் மேல் நோக்கி நிற்கும் ரிஷபத்தின் மேல் வீசிய பத்து கரங்களில் கத்தி சூலம், தண்டம், குத்தீட்டி, கபாலம், பாம்பு ஏந்தி பிரளயகாலத்தில் சகல ஜீவராசிகளும் தன அடி சேர்ந்து ஒடுங்கிய காட்சியினை கட்டிடும் அற்ப்புதமான திருஉருவம், இம்மூர்த்தியினைபிரதோஷ நாளில் மட்டுமே காணமுடியும்.
அமிர்தகடேஸ்வரர்
அரக்கர்களும் தேவர்களும் திருப்பர்கடலை கடைந்து அமுதத்தினை பெற்றனர். தேவர்கள் முதலில் வழிபாடு செய்யவேண்டிய விநாயகரை வழிபடாமல் அமிர்தம் உண்ண அமர்ந்தனர் விநாயகர் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமிர்த கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்து வரும் வேளையில் ஒரு துளி அமிர்தம் கடம்பவனகாட்டில் வீழ்ந்து லிங்கமானது . இவரே இத்தல இறைவன் அமிர்தகடேஸ்வரர் கடம்பவனம் பின்நாளில் கடம்பூர் என பெயர் பெற்றது


No comments:

Post a Comment